சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட பிரிவு (BC),பிற்படுத்தப்பட்ட-முஸ்லிம் (BC-M), ஆதிதிராவிட அருந்ததியினர் (SC-A) மற்றும் பழங்குடியினர் (ST)இடங்களில் 140 சேர்க்கை இடங்கள்
காலியாகவுள்ளன கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் பி.ஆர்.ராஜகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில், 2016-17-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை செய்யப்பட்டனர். மேற்கண்ட இரண்டு கலந்தாய்வுகளின் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மற்றும் ஆதிதிராவிட (SC) பிரிவுகளுக்கான இடங்கள் முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட பிரிவு (BC), பிற்படுத்தப்பட்ட- முஸ்லிம் (BC-M), ஆதிதிராவிட அருந்ததியினர் (SC-A) மற்றும் பழங்குடியினர் (ST) இடங்களில் 140 சேர்க்கை இடங்கள் காலியாகவுள்ளன. எனவே, 14.06.2016 (அனைத்து இளம் அறிவியல் பாடப்பிரிவுகள்), 15.06.2016 (அனைத்து இளங்கலை பாடப்பிரிவுகள்), தேதிகளில் நடைபெறவுள்ள மூன்றாம் கலந்தாய்விலும், 20.06.2016 (அனைத்து இளம் அறிவியல் பாடப்பிரிவுகள்), 21.06.2016 (அனைத்து இளங்கலை பாடப்பிரிவுகள்) தேதிகளில் நடைபெறவுள்ள நான்காம் கலந்தாய்விலும், 10.06.2016 வரை காலதாமதமாக விண்ணப்பித்த மேற்கண்ட பிரிவு (BC, BC-M, SC-A 000b ST) மாணவர்களை கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது என கல்லூரி முதல்வர் பி.ஆர்.ராஜகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.