கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்,
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டிற்கான சேர்க்கைக்கு வரும் 30-ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவரவர் இருப்பிடங்களில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை, விலையில்லாச் சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள், மடிக்கணினி, வரைபட உபகரணங்கள், இலவச பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகங்கள், ரயில் கட்டணச் சலுகை அட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.