மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால், மாணவர்களின் விளையாட்டு திறன்
கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி என, இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், 152 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 129 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 281 அரசு பள்ளிகள் உள்ளன. பணியிடங்கள் காலிஇந்த பள்ளிகளில் உடற்கல்வி பிரிவில், பள்ளி மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிண்டன், சதுரங்கம், செஸ், ஹாக்கி, கோ -கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
ஆனால், மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளில், 130க்கும் மேற்பட்ட பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான ஸ்கிப்பிங் கயிறு, சதுரங்க பலகை, கைப்பந்து உள்ளிட்ட சாதனங்கள் கூட இல்லாதது வேதனைக்குரிய விஷயம். சில பள்ளிகளில், விளையாட்டு பிரிவு என்பதே கிடையாது. பல பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர பணியில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் பள்ளி கல்வித்துறையின் அலுவலகப் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
இதனால், மாவட்டத்தில் நடத்தப்படும் குறுவள விளையாட்டு போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றும், தனியார் பள்ளிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏனென்றால், அரசு பள்ளி மாணவர்களுக்கு குறுவள விளையாட்டு போட்டி நடைபெறும் போது, உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், பிற ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுவதே முக்கிய காரணம். விளையாட்டு பிரிவுக்கு என அரசு ஒதுக்கும் நிதி, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், விளையாட்டு போட்டிக்கு அனுப்பவுமே போதுமானதாக இல்லை என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் கோரிக்கை:இவ்வாறு, பல்வேறு காரணங்களால், அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன், எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எனவே, அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, பள்ளிகளில் தேவையான
உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில், நன்னெறி கல்வி, யோகா, கணினி கல்வி, ஓவியம், விளையாட்டு,
சுற்றுச்சூழல் கல்வி, நுாலகம் என்பது குறித்து, வகுப்பு பாடவேளையில், பாடப்பிரிவு ஒதுக்க வேண்டும். ஆனால், போதிய ஆசிரியர்களை நியமிக்காததால், பெரும்பாலான பள்ளிகளில், இந்த
பாடப்பிரிவுகளுக்கு பாடவேளை ஒதுக்குவதில்லை.
மேலும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற துறை ஒதுக்கப்பட்டும்,
அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனில், எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், திருவள்ளூர்
கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன், விளையாட்டு பிரிவுக்கு என, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களிடம், தலா, 10 ரூபாயும், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், 20 ரூபாயும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடம், 30 ரூபாயும் வசூலித்து, விளையாடடு பிரிவிற்கு பயன்படுத்தி வந்தோம். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசே பள்ளி கல்வி
கட்டணம், விளையாட்டு கட்டணங்களை வழங்கும் என, அறிவித்ததையடுத்து, கட்டணம் வாங்குவது நிறுத்தப்பட்டது.
மேலும், தற்போது அரசு வழங்கும் பள்ளி பராமரிப்பு பணி மற்றும் உபகரணங்கள் வாங்க, ரூ. 55 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வழங்கி வருகிறது. இதேபோல்,
விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் நிதி ஒதுக்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறை அலுவலர், திருவள்ளூர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.