பள்ளி மாணவர்களிடையே யோகாவை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் டெல்லியில் உள்ள என்சிஇஆர்டி வளாகத்தில் 3 நாள் யோகா விழா (யோகா ஒலிம்பைடு) நேற்று தொடங்கியது. நாட்டின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 350
மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை செயலாளர் சுபாஷ் சந்திர குந்தியா நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “மத்திய அரசு வகுத்து வரும் புதிய கல்விக் கொள்கையில் யோகாவுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட உள்ளது. பள்ளிகளில் யோகா பயிற்சி ஊக்குவிக்கப்படும். மனநலம் மற்றும் உடல்நலனை உறுதி செய்யும் கலையாக யோகா திகழ்கிறது. யோகாவுக்கு என்சிஇஆர்டி புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை இது கட்டாயம் ஆகிறது. முக்கிய பள்ளிகளில் சான்றிதழ் பெற்ற யோகா ஆசிரியர்கள் உள்ளனர். யோகா ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் மூலம் பயற்சி அளிப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு யோகா நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.