மதுரை காமராஜ் பல்கலையில் ஏப்ரலில் நடந்த பருவமுறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலையில் உடனடி தேர்வு நடக்கிறது.
தேர்வாணையர் விஜயன் அறிக்கை: இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு முடிவுகளை
www.mkuniversity.org இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்போர் மதிப்பெண் பட்டியலுக்கு காத்திருக்காமல், அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பெற்று 8.7.2016 க்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் (www.onlinesbi.com) மட்டுமே செலுத்த வேண்டும். தாமத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
உடனடி தேர்வு : ஐந்தாவது பருவமுறை வரை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, ஆறாவது (ஏப்., 2016) பருவமுறையில் தோல்வி அடைந்த மாணவர்கள் நலன் கருதி, ஜூலையில் உடனடி தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விபரங்களும் இணையதளத்தில் உள்ளன. 8.7.2016க்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.