Friday, June 24, 2016
மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர வெளிமாநிலங்களில் படித்தவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள முதல் 10 மாணவர்களில் 5 பேர் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள மாநிலங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வியை அனைவருக்கும் வழங்கக்கூடாது; எல்லையின் பெயரால் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடாது என்பது தான் பா.ம.க. நிலைப்பாடு என்ற போதிலும், தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறித்துவிட்டு பிற மாநிலங்களில் படித்தவர்களுக்கு கல்வி வாய்ப்பு அளிப்பதை ஏற்க முடியாது.
எனவே, வெளிமாநிலங்களில் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களை தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கக்கூடாது. தமிழகத்தில் படித்தவர்களுக்கு மட்டும் தான் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.