WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 24, 2016

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.


கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்; ஆகஸ்ட் 2016 –க்கான சேர்க்கைக்கு கால அவகாசம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்; அவரவர் வசிக்கும் இடத்திலிருந்தபடியே www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ500/- உதவித்தொகையுடன் விலையில்லா சீருடைகள் காலணிகள் மிதிவண்டி லேப்டாப் வரைபட உபகரணங்கள் பாடபுத்தகங்கள் பேருந்து பயண அட்டை மற்றும் சலுகை கட்டணத்தில் இரயில் பயண அட்டை ஆகிய சலுகைகளுடன் முற்றிலும்; இலவசமான பயிற்சி பெற மாணவர்கள் 30.06.2016-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.