வரும் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
நிகழ் கல்வியாண்டில் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை இரண்டாமாண்டுத் தேர்வுகளும், ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி, 16- ஆம் தேதி வரை முதலாமாண்டு தேர்வுகளும் நடைபெறவுள்ளன.
இந்தத் தேர்வுகள் எழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தத்கல்) விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் ஆகியோர் www.tngdc.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை சனிக்கிழமை (ஜூன் 25) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.