தமிழகத்தில், அரசு பள்ளிகளில் அதிகாரப்பூர்வ யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளில், யோகா தினம் கடை
பிடிக்கப்பட்டது. மத்திய அரசு, யோகா எனும் பாரம்பரிய உடற்பயிற்சியை,
இந்திய கலாசார நிகழ்வாகவும், சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பலனாக, ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21ல், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என, ஐ.நா., சபை
அறிவித்தது. இரண்டாம் ஆண்டாக, நேற்று யோகா தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இதற்காக, பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடந்தன. ஆனால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் யோகா தினம் கொண்டாடப்படவில்லை.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிக் கல்வி செயலகத்தில் இருந்து, யோகா நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று, எந்த அறிவிப்பும் வரவில்லை. தமிழகத்தில், தினமும் அரசு பள்ளிகளில், 20 நிமிடங்கள் யோகா வகுப்பு அமலில் உள்ளதால், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவில்லை' என்றனர். அதேநேரம், அரசு அறிவிக்காதபோதும், தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.