Saturday, August 6, 2016
பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு.
பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். இதே இணையதளம் மூலம், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். ஆக., 9 காலை, 10:00 முதல், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.