WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 6, 2016

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், 1,000 பேருக்கு, சிறப்பு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இந்த பயிற்சிக்கு, 30 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.