WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 6, 2016

'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்.

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது; ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில், தேர்வரின் கணினி பயன்பாட்டு விடைத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள், இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. இன்று மாலை வரை, மாணவர்கள், தங்கள் உள்ளீட்டு எண்ணை பயன்படுத்தி, அவற்றை பார்க்கலாம். மேலும், நீட் இணையதளம் மூலம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,க்கு கருத்துக்களை தெரிவிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.aipmt.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.