WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 7, 2016

அக்டோபர் 30க்குள் அங்கீகாரம் : மழலையர் பள்ளிகளுக்கு கெடு.

மழலையர் பள்ளிகள், அக்டோபர், 30க்குள் அங்கீகாரம் பெற வேண்டும்' என, கல்வித்துறை கெடு விதித்துள்ளது. 'பிளே ஸ்கூல்' எனப்படும், மழலையர் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. சிறிய அறைகளில் இப்பள்ளிகள்
நடத்தப்படுவதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இப்பள்ளிகளை முறைப்படுத்த, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், விதிகளை வகுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள், விதிகளை வகுத்தனர். இது தொடர்பாக, பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்ட பின், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி, மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, தொடகa்கக் கல்வித் துறை முன்வந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் நடத்திய ஆய் வில், 6,500 மழலையர் பள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பள்ளிகள் கட்டாயம் அங்கீகாரம் பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்கட்டமைப்பு வசதி, இட வசதி உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறுவதற்கு அக்., 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.