WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 9, 2016

பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.


பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன்
தெரிவித்தார். இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்தி: பெரியார் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் (பிரைடு) அங்கீகாரம் பெற்றுள்ள படிப்பு மையங்களில் பயின்று வரும் மாணவ-மாணவியருக்கு, கடந்த மே மாதம் தேர்வுகள் நடைபெற்றன. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகளை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஆக.9) வெளியிடப்படுகிறது. மாணவ-மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.