WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 4, 2016

'செட்' தேர்வு முடிவு வெளியாவதில் இழுபறி.


கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வு முடிந்து, ஆறு மாதங்கள் ஆன பிறகும் முடிவுகள் வெளியாகவில்லை. கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில
அரசின், 'செட்' தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வை, கடுமையான கட்டுப்பாடுகள், தரமான வினாத்தாளுடன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. நெட் தேர்வுக்கு இணையான, செட் தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, அன்னை தெரசா பல்கலை மூலம், செட் தேர்வு, பிப்., 20ம் தேதி நடத்தப்பட்டது. ஆறு மாதங்களாகியும், முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால், பல பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, பணி நியமன அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேலான பட்டதாரிகள், பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.