WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 5, 2016

தலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு.

அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி
தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 168 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 86 பேருக்கு மட்டும் விருப்பமான இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள, 82 பேர் தலைமை ஆசிரியர்களாகவே பணியை தொடர விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு இன்னும், மூன்று ஆண்டுகளுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை. ஆனால், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இணையான ஊதியம், சலுகை பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.