WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 9, 2016

1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்., இன்று அறிமுகம்.


ரிலையன்ஸ், ஜியோ' வரவைத் தொடர்ந்து, அதற்கு போட்டியாக, பி.எஸ்.என்.எல்., அறிவித்த, 'ஒரு ரூபாய்க்கு, ஒரு ஜி.பி., பிராட்பேண்ட் இன்டர்நெட் டேட்டா' திட்டம் இன்று முதல் அமலாகிறது. இது குறித்து, தமிழ்நாடு
வட்ட மற்றும் சென்னை வட்ட பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே, திட்டத்தின் நோக்கம். அதனால் தான், 'எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் - 249' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி, தரைவழி கேபிள் மூலம் தரப்படும், 'பிராட்பேண்ட், இன்டர்நெட்' இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளர்கள், 300 ஜி.பி., வரை, இலவச டேட்டா பயன்படுத்தலாம். இதை கணக்கிட்டால், வாடிக்கையாளர்களுக்கு, ஒரு, ஜி.பி., ஒரு ரூபாய்க்கு கிடைக்கும். மேலும் விபரங்களை, 1800 345 1500 என்ற, கட்டணமில்லா தொலைபேசி மற்றும் www.bsnl.co.in இணையதள முகவரி மூலம் அறியலாம். சென்னை வட்டத்தில், 6.5 லட்சம் தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்; அதில், மூன்று லட்சம் பேர் மட்டுமே, பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளனர். புதிய சலுகை திட்டத்தை பயன்படுத்தி, மீதம் உள்ளவர்களையும், 'பிராட்பேண்ட்' வாடிக்கையாளராக மாற்ற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.