ஆசிரியர்களுக்கு விருது வழங்கியதில், இந்த ஆண்டும், சென்னை அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்தவலியுறுத்தி உள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தனித்தனியே விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய விருதுக்காக, தமிழகத்தில் தேர்வான, 23 பேரில், சென்னையில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட இல்லை. மாநில விருதுக்கு தேர்வான, 379 பேரில், சென்னை மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மட்டுமே இடம்பெற்றார். இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:சென்னையில், அலுவல் சார்ந்த பணிகளில், அதிக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்தனர். அதற்கான, 'பைல்'களை, முதன்மை கல்வி அலுவலககமிட்டியினர் ஆய்வு செய்து செயலகத்துக்கும், இயக்குனர் அலுவலகத்துக்கும் பரிந்துரைத்தனர். உயர் அதிகாரிகளின் இறுதி பட்டியலில், தனியார் பள்ளி ஆசிரியர்களின், பல பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 'பைல்' எங்கே மாறியது என, கமிட்டியினர் ஆச்சரியத்தில் உள்ளனர். விருது பெறக்கூட தகுதியில்லாத ஆசிரியர்கள், சென்னை அரசு பள்ளிகளில் பணியாற்றுகின்றனரா என, கிண்டல் அடிக்கின்றனர்; வேதனையாக உள்ளது. விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவையில் சிக்கல் : கோவை மாவட்டத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், பார்வையற்ற ஆசிரியரை துன்புறுத்தியது தொடர்பான புகார் நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்த, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம், முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.