WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 10, 2016

5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்'.

                                            
தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பல கட்டங்களாக, 42.6 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவசமாக, 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., அறிவித்தது. தற்போது, ஆட்சிக்கு

வந்த பின், இலவச இன்டர்நெட் பற்றி முடிவெடுப்பதில், தாமதம் ஏற்பட்டுஉள்ளது.

அதனால், லேப் - டாப் கொள்முதல் பற்றிய அறிவிப்பை வெளியிடாமல், அரசு நிறுத்தி வைத்துள்ளது. இப்போது, முதலில் லேப் - டாப்களை கொள்முதல் செய்து விடலாம்; அப்புறம், இலவச இன்டர்நெட் இணைப்பு பற்றி யோசிக்கலாம் என, அரசு முடிவெடுத்து உள்ளது.


இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ஆண்டில், ஐந்து லட்சத்து, 36 ஆயிரம், லேப் - டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன; அதற்கான உத்தரவு, வெளியிடப்பட்டு உள்ளது' என்றனர். ஆனால், இதுவரை, 'டெண்டர்' கோரவில்லை; அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த கல்வியாண்டில், மாணவர்களுக்கு இலவச, லேப் - டாப் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.