WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 10, 2016

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்.

                         Prakash-Javadekar
அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்விச் சான்றிதழ்களும் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக, "டிஜிட்டல் இந்தியா' பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியுள்ளார்.
முதலீட்டாளர்களின் நிதி வளங்களைப் பாதுகாக்கும் வகையில், நிதி சார்ந்த பத்திரங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி, ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், கல்விச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில், புதிய கல்விச் சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதோடு, தாங்கள் ஏற்கெனவே பெற்ற சான்றிதழ்களையும் இணையத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம். அவர்களது விவரப் பட்டியலில் அனைத்துச் சான்றிதழ்களும் கிடைக்கும். இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பணியில் அமர்த்துபவர்களுக்கு எளிதில் கிடைப்பதோடு, சான்றிதழ்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களை நேரில் அணுகுவதும் குறையும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.