WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 15, 2016

எப்படி நடத்த போறாங்க!; பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிக்கல்!.

பாலிடெக்னிக் கல்லுாரியில், அக்., 3ம் தேதி முதல் பருவத் தேர்வு துவங்க உள்ள நிலையில், ஆய்வக வசதிகள் இல்லாத, 15 கல்லுாரிகளில், செய்முறை தேர்வு நடத்துவதில், சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. கல்லுாரி மாணவர்களுக்கான, செய்முறை பருவத் தேர்வு, அக்., 3ம் தேதியும், எழுத்து தேர்வு, 18ம் தேதியும் துவங்குகிறது. கோவை மண்டலத்தில், 15 சுயநிதி பாலிடெக்னிக் கல்லுாரிகளில், போதிய ஆய்வக வசதிகள் இல்லாததால், தேர்வு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த கல்வியாண்டில், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், செய்முறை தேர்வு நிறுத்தப்பட்டும், ஆய்வக வசதியை மேம்படுத்தவில்லை. தேசிய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, முறையான ஆய்வகம் இருந்தால் மட்டுமே, பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்க இயலும். அடிப்படை ஆய்வக வசதி இல்லாமல், அங்கீகாரம் பெற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நுட்பக் கல்வி ஆய்வக அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் அடங்கிய கோவை மண்டலத்தில், 74 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன; 15 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் ஆய்வக வசதி இல்லை. எவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டிருக்கும் என்பது கேள்விக்குறி தான் என்றார். கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் அடங்கிய கோவை மண்டலத்தில், 74 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.