பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம்
செய்யப்படவில்லை.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் உயர் கல்வி எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு, பொதுத் தேர்வை எதிர்கொள்ள, தங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தருகின்றன.
இந்நிலையில், 2017 மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. பல்வேறு வகை வினாத்தாள்கள் பாட வாரியாக பெறப்பட்டுள்ளன.
இதில், ஐந்து வகை வினாத்தாள் பட்டியல் தயாரிக்கப்படும். டிசம்பர் இறுதி யில், இந்த பட்டியலுக்கு அரசின் அனுமதி கிடைத்ததும், அச்சிடப்பட உள்ளது. இந்த வினாத்தாளில், எந்தவித மாற்றமும் இன்றி, முந்தைய ஆண்டுகளின் படியே வினாக்கள் இடம் பெறும் என, தெரிகிறது.
இதுகுறித்து, தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள், விரைவில் சுற்றறிக்கை வெளியிட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.