WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 5, 2016

பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுக்கு இடையே, பருவத் தேர்வு நடத்தப்படும். அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில், அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்விகள் இடம் பெறும். அரசு பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வை சமாளிக்கும் வண்ணம், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 'இந்த ஆண்டுக்கான முன் அரையாண்டு தேர்வு, வரும், 14ல் துவங்கி, 25 வரை நடத்தப்படும்' என, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.