WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 5, 2016

சான்றிதழில் கல்வி நிலை : பல்கலைகளுக்கு உத்தரவு.


வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழில், தொலைநிலை கல்வி குறித்து குறிப்பிட வேண்டும்' என, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,
அறிவுறுத்தி உள்ளது. பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது, எவ்வகை படிப்பு என்பது குறிப்பிடப்படுவது இல்லை. மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழில் மட்டுமே, நேரடி படிப்பு அல்லது தொலைநிலை கல்வி என, குறிப்பிடப்படுகிறது. பட்ட சான்றிதழில் இக்குறிப்புகள் இருக்காது. இந்நிலையில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழ் வழங்கும் போது, மாணவரின் படிப்பு முறை, நேரடி வகுப்பா அல்லது தொலைநிலை கல்வியா என்பதை குறிப்பிட வேண்டும்' என, தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.