WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 20, 2016

அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்.

காலியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் பாலச்சந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். வணிகவியல், பொருளியல் படித்தவர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி காலியிடங்களை, தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள், போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.