WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 19, 2016

அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.. பழைய ஓய்வூதியத்துக்கான வல்லுநர் குழு பதவி காலம் நீட்டிப்பு!.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் வல்லுநர் குழு பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வல்லுநர் குழு அமைத்து ஓய்வு திட்டம் குறித்து பரிசீலிப்போம் என்று சொல்லியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா. அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தார். இதில், நிதித்துறை அதிகாரி ஒருவரை உறுப்பினர் செயலாளராகவும், வெளியிலிருந்து 3 வல்லுநர்களை உறுப்பினர்களாகவும் நியமித்தனர்.  VIDEO : ரூபாய் நோட்டு விவகாரம் : மம்தா பானெர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களுடன் சந்திப்பு  Powered by இதன் ஆயுள் காலம் 3 மாதங்கள். ஆனால், ஒரேஒரு முறைதான் இந்த குழு கூடியது. அதற்குள் ஆயுள் காலம் முடிய, மேலும் 3 மாதங்கள் நீட்டித்து 4 மாதங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தது நிதித்துறை. இந்த நிலையில், அரசு ஊழியர் சங்கங்கள் சிலவற்றை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது வல்லுநர் குழு. ஆனாலும் அதில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படமுடியவில்லை. இந்தச்சூழலில், அதன் ஆயுள் காலம் கடந்த செப்டம்பர் 26 -ந்தேதியோடு முடிந்து போனது. செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டானதால் வல்லுநர் குழுவின் காலம் நீட்டிப்பு குறித்து எந்த முடிவையும் அதிகாரிகளால் எடுக்க முடியவில்லை. விரைவில் வீடு திரும்பி விடுவார் என்கிற நம்பிக்கையில் இது குறித்து அக்கறைக்காட்டவில்லை அதிகாரிகள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.