WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 16, 2016

வி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு.

'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ., பதவிகளில் நேரடி நியமனம் செய்ய, பிப்., 28ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை, 1ல், வெளியாகின. பின், தேர்வு பெற்றவருக்கு, ஆக., 1 முதல், 8 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ரேங்க் பட்டியலின்படி, தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு, வரும், 19 முதல், 23 வரை, கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான கூடுதல் தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.