WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 16, 2016

அரசு ஊழியர் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்வு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி, முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்றுள்ள, மத்திய அரசு அலுவலர்களுக்கு, ஜூலை, 1 முதல், 2 சதவீதம்; திருத்திய ஊதியம் பெறாத, மத்திய அரசு அலுவலர்களுக்கு, 7 சதவீதம் என, அகவிலைப்படியை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, அகவிலைப்படி, ஜூலை, 1 முதல், 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். அதன்படி, அகவிலைப்படி, 125ல் இருந்து, 132 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களுக்கு, 420 ரூபாய் முதல், 5,390 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 214 ரூபாய் முதல், 2,695 ரூபாய் வரை கிடைக்கும். ஜூலை, 1 முதல், நவ., வரையான அகவிலைப்படி உயர்வு, அவரவர் வங்கி கணக்குகளில், மொத்தமாக செலுத்தப்படும். இந்த மாதம் முதல், அகவிலைப்படி உயர்வு, சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு, ஆண்டுக்கு, 1,833 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.