Wednesday, December 14, 2016
'வார்தா' புயல் பாதிப்பு: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை விடுமுறை
'வார்தா' புயல் பாதிப்பை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 'வார்தா' புயலின் கோரத் தாண்டவத்தால், 2810 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 492 மின் கம்பங்களும், 175 தெரு மின் விளக்கு கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இதனால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டன. மின் விநியோகமும் நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வளாகங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும், பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.