Wednesday, December 14, 2016
அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்?
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவி யருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, பள்ளி கள் திறக்கப்பட்டு, ஏழு மாதங்களாகியும், இதுவரை, இலவச சைக்கிள் வினியோகம் செய்யப்படவில்லை. தற்போது, தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இலவச சைக்கிள், உதிரி பாகங்களாக, லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார் செய்யும் பணிகள் நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், சைக்கிள் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள் திறந்த பிறகு, இலவச சைக்கிள் வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.