WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 12, 2016

பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் பிழை கூடாது.

"தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் செய்முறை தேர்வு, மார்ச்சில் பொது தேர்வும் நடக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 எழுதக்கூடிய மாணவர்கள் குறித்த விபரம் சேகரிக்கும் பணி கடந்த இரு மாதங்களாக நடந்து வந்தது.தற்போது, டிச.,மாதம் துவங்கியுள்ளதால், இறுதி கட்ட நிலவரம் குறித்த கேட்டறியும் பணியில் தேர்வுத்துறை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பத்தில் மாணவர் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, ஜாதி, பள்ளியில் சேர்ந்த ஆண்டு, சேர்ந்த வகுப்பு உள்ளிட்ட விபரங்களை முழுமையாக பதிவேற்ற வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து மாணவர் விபரமும் கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தேர்வுக்கு பின், மாணவருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் எவ்வித தவறும் இருக்ககூடாது; எனவே, ஆசிரியர் குழுவினர் எவ்வித எழுத்து பிழை, திருத்தமின்றி, தெளிவாக பட்டியலை கவனமுடன் தயாரிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்காக அமைக்கப்பட்ட ஆசிரியர்கள் குழுவினர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 எழுதக்கூடிய மாணவர்களிடம் இறுதிகட்ட விபரங்களை சேகரித்து வருகின்றனர்." - பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் பிழை கூடாது http://tz.ucweb.com/12_IE4t

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.