சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, 2013 முதல், தமிழக அரசின் நேரடி நிர்வாகத்தில் செயல்படுகிறது. இங்கு, ஏராளமான
ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இருந்ததால், அவர்களுக்கு சம்பளம் வழங்க, அரசால் முடியவில்லை. எனவே, உபரியாக இருப்போர், இடம் மாற்றப்படுகின்றனர். 2016ல், 367 பேராசிரியர்கள், அரசு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். தற்போதைய நிலையில், பேராசிரியர்கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு, மாதம், 50 கோடி ரூபாய் வரை, ஒதுக்கப்படுகிறது.பல்கலையின் பல்வேறு துறைகளில், 1,080 பேராசிரியர்கள், 4,722 ஊழியர்கள் கூடுதலாக உள்ளதை, பல்கலை கண்டறிந்துள்ளது. இவர்களை, மற்ற அரசு கல்லுாரிகளுக்கு மாற்றினால், மாதம், 19.52 கோடி ரூபாய் மீதமாகும் என, உயர்கல்வித் துறை கணக்கிட்டுள்ளது. ஆனால், பேராசிரியர், ஊழியர்களை, பிற கல்லுாரிகளுக்கு மாற்ற, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்காக, இன்று ஆசிரியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவும், பிப்., 3 வரை, கல்லுாரிகள் முன் ஆர்ப்பாட்டம், பிப்., 11ல், சென்னையில் உண்ணாவிரதம், பின் மறியல் போராட்டம் நடத்த, அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.