WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 23, 2017

பத்தாம் வகுப்பு: நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

    10th exam

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்ககம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தத்கல்) கடந்த பிப்ரவரி 16, 17 தேதிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.