WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 23, 2017

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் வெற்றிபெற்ற தேர்வர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் மார்ச் 20-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் 3 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரங்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கான தேதிகள், மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான http://WWW.upsc.gov.in-இல் விரைவில் வெளியிடப்படும். இந்த விவரங்கள் கடிதங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல்கள் வாயிலாகவோ தெரிவிக்கப்பட மாட்டாது.
அவ்வாறு நேர்முகத் தேர்வுகள் குறித்து இணையதளத்தில் வெளியாகும் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், குடிமைப் பணிகள் தேர்வாணையத்தை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இதற்காக, 011 - 23385271, 23381125 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.