WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 28, 2017

இந்திய வனப் பணி தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு.

இந்திய வனத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யூபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 110 பணி: Indian Forest Service Examination தகுதி: கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியமைப்பியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம், வனவியல் அல்லது பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2017 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.06.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Engl_IFS_2017_0.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.