Tuesday, February 28, 2017
‘பள்ளிக் கல்வித் துறைக்கு 5 ஆண்டுகளில் ரூ.82 ஆயிரம் கோடி ஒதுக்கீடு’.
கோபி தொகுதிக்கு உட்பட்ட, ஆறு பள்ளிகளைச் சேர்ந்த, 1,919 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவில் சைக்கிள் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: கடந்த ஐந்நாண்டில் மட்டும், பள்ளிக்கல்வித் துறைக்காக, 82 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 28 ஆயிரத்து, 474 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 31 லட்சம் பேருக்கு இலவச லேப் - டாப் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 5.84 லட்சம் பேருக்கு வழங்க உள்ளோம்.
ஆசிரியர்களின் குறைபாடு, ஒன்றன் பின் ஒன்றாக சரிசெய்து கொடுக்கப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளதோ, அதை வரும் நிதியாண்டில், முதல்வரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், அனைத்து அரசு பள்ளிகளில், யோகா வகுப்பு துவங்க சிந்தித்து வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள நகரம் மற்றும் ஒன்றியங்களில், சிறந்த கல்வியாளர் மற்றும் வல்லுனர்களால், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும். மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான ஆணை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.