WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 21, 2017

10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும்?

பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம் பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என, கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நேற்று கணித தேர்வு நடந்தது. பொதுவாக கணித தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும் என, மாணவர்கள் விரும்புவர். ஆனால், நேற்றைய வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்களின் சென்டம் லட்சியம் நிறைவேறுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.

● இரு மதிப்பெண்ணுக்கான, 36வது கட்டாய வினாவில், இடம்பெற்ற கிரியேட்டிவ் வகை வினா கடுமையாக குழப்பியது. இந்த வினாவை, புத்தகத்தில் பார்த்ததே இல்லை என, மாணவர்கள் கூறினர்

● ஐந்து மதிப்பெண்ணுக்கான, 45வது வினாவில், 'பி' பிரிவு வினா கடினமாக இருந்தது. ஆனாலும், சாய்ஸ் என்ற விருப்ப வினாவில், கடின வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்காமல் விட்டு விட்டனர். இதனால், சென்டம் குறையலாம் என, ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.