Tuesday, March 21, 2017
சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்து விலக்கு?
டெட் தேர்விலிருந்து, சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது. இது குறித்து, மாநில தலைவர் இளமாறன் கூறியதாவது: அரசு பள்ளிகளில், 2011 டிசம்பரில், 3,200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில், 300 பேர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், கலப்பு திருமணம் செய்தோர் என்ற, சிறப்பு பிரிவுகளில் தேர்வாகினர். இந்த ஆசிரியர்களும், 'டெட்' தேர்வு எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அவர்களுக்கு, தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும். 2004ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணி வரன்முறை பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.