WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 21, 2017

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிட கல்வி துறை தீவிரம்.

தேர்வுத் துறை மூலம், ஆய்வக உதவியாளர் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தயாரிக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு நடந்தாலும், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, பணி நியமனம் செய்யப்படும் என, அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிப்பு பணி, மீண்டும் துவங்கிஉள்ளது.இந்த முறை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மூலம், இறுதி பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில், பல ஆண்டுகளாக பணியாற்றிய, இணை இயக்குனர் சேதுராம வர்மா மூலம், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுவதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கு, தேர்வுத் துறையினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'தேர்வை நடத்துவது நாங்கள்; முடிவை தயாரிப்பது, பள்ளிக்கல்வி அதிகாரிகளா' என, கேள்வி எழுப்பிஉள்ளனர்.ஆய்வக உதவியாளர் தேர்வு துவங்கியது முதல், சர்ச்சைகள் குவிந்த வண்ணம் உள்ளன. 2015ல், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் ஓய்வு பெற, இரு மாதங்களே இருந்த நிலையில், அவசர அவசரமாக, ஆய்வக உதவியாளர் தேர்வை நடத்தினார். தேர்வு முடிவுகளும், அவசர கதியில் தயாரானது. பின், வழக்கு காரணமாக, தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.அதன் காரணமாக, தற்போது, பள்ளிக்கல்வி அதிகாரிகள், தேர்வு முடிவை தயாரித்து வருகின்றனர். அதில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையீட்டால், மீண்டும் குளறுபடி ஏற்பட்டுவிடக் கூடாது என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.