குரூப் - 1 தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
இது
குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:துணை கலெக்டர் -19; டி.எஸ்.பி., - 26-, வணிகவரித் துறை உதவி கமிஷனர் - 21 மற்றும் மாவட்ட பதிவாளர் - எட்டு என, 74 காலி பணியிடங்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலையில் நடந்தது. இதில், 2,926 பேர் பங்கேற்றனர். இவர்களில், 148 பேர், மதிப்பெண், விதிகள் அடிப்படையில், தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இது குறித்த விபரங்கள், www.tnpsc.gov.in இணையதளத்தி-ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன், 5 முதல், 9 வரை நடக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.