WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 19, 2017

பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு.

மதுரையில் தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்' அலுவலகம் வரவேண்டும்,' என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குவதில் ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் நேரடியாக பள்ளிகளுக்கே வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் கல்வித்துறை சார்பில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மதுரையில் 15 ஒன்றியங்களுக்கு உட்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோட்டுக்களும் வந்து இறங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வைக்க போதிய இடவசதி இல்லாததால் பல உதவி பெறும் பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது 'நோடல்' மையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்கள் கையிலும் புத்தகம், நோட்டு இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 'புத்தகங்கள் எடுத்து செல்ல தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., அலுவலக 'நோடல்' மையங்களுக்கு மறக்காமல் சாக்கு பைகளுடன் வர வேண்டும்,' என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.