எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘போனஃபைடு’ சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று மருத்துவக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnmedicalselection.org) கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் ‘போனஃபைடு’ சான்றிதழ் பெற்று விண்ணப்பித்து வந்தனர்.
அந்த பள்ளியில் படித்த மாணவர்தான் என்பதை உறுதிப்படுத்த, இச்சான்றிதழ் பெறப்பட்டது. இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, ‘போனஃபைடு’ சான்றிதழ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவர் தேர்வுக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களில், 2022- 23-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் விண்ணப்பத்தில், ‘போனஃபைடு’ சான்றிதழ் இணைக்கத் தேவை யில்லை.
அவர்களது தகுதி உள்ளிட்ட விவரங்கள், பள்ளிக்கல்வித் துறையின் ‘எமிஸ்’ தகவல் அமைப்பு மூலம் உறுதி செய்து கொள்ளப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.