WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 12, 2017

’நீட்’ தேர்வு முடிவுகள் வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி.

                                       

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வு மே 7 ம் தேதி நாடு முழுவதும் நடந்தது.

இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.


மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை ஐகோர்ட் கிளையும், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டது. இதனையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், இன்று (ஜூன் 12) விசாரித்தது. 


மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என அனுமதி அளித்தது. மேலும் மதுரை ஐகோர்ட் கிளை விதித்த தடை உத்தரவை நீக்கியதுடன், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை மாநில ஐகோர்ட்கள் விசாரிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.


நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனமதி அளித்துள்ளதை அடுத்து நாளை மறுநாள் (ஜூன் 14) நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் நாளையே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.