WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 12, 2017

மொபைல் போனுடன் தேர்வு? யு.பி.எஸ்.சி., எச்சரிக்கை!

                                        
’ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர்,தேர்வு மையத்திற்குள், மொபைல் போன் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தால், அவர்கள் எதிர்காலத்திலும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்’ என, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுபணியாளர் தேர்வு வாரியம்எச்சரித்துள்ளது.


இது குறித்து. யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ள தாவது:


சிவில்சர்வீஸ் எனப்படும் மத்திய அரசு பணிகளுக்கான முதல்கட்ட தேர்வு, ஜூன் 18ல் நடக்கிறது. இதில், லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்குள், கண்டிப்பாக, மொபைல் போன், புளுடூத் கருவிகள், லேப்-டாப் உள்ளிட்ட, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எதையும் கொண்டு வரக்கூடாது; இதற்கு முழுமை யாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


தேர்வு மையத்திற்குள், எலக்ட்ரானிக்ஸ்பொருட்கள் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்க ள் எதிர்காலத்திலும் தேர்வு எழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள்; அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.