WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 20, 2017

பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண்: அண்ணா பல்கலை வெளியீடு!

"பொறியியல் படிப்பிற்கான ரேண்டன் எண்-ஐ அண்ணா பலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல்
கல்லூரிகளுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைகத்தின் கீழ் சுமார் 550 பொறியியல் கல்லூரிகளில் , பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவது வழக்கம். ஏற்கனவே பொறியியல் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் மே 1 முதல் 31 வரை கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு 1.68 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, 'ரேண்டம்' எண், இன்று(ஜூன் 20) வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேண்டம் எண்ணை, உயர் கல்வி துறை செயலர் சுனில் பாலிவல் வெளியிட்டார். விண்ணப்பித்த ஒவ்வொரு மாணவருக்கும், தனித்தனி 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும். ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை அண்ணா யுனிவர்சிட்டி இணைய தளங்களில் பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.