பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் ஏராளமான பிழைகள் உள்ளன. இதனால் அவற்றை வழங்காமல் பள்ளிகள் நிறுத்தி வைத்துள்ளன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12 ல் வெளியாகின. அப்போது 'ஆன்லைன்' மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த சான்றுகளை பயன்படுத்தி மாணவர்கள் கல்லுாரிகளுக்கு விண்ணப்பித்தன. மறுமதிப்பீடு, மறுகூட்டல் போன்றவை முடிந்து, ஜூலை 10 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. போலியை தடுக்க இந்தமுறை மதிப்பெண் சான்றுகள் நீலநிறத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் மாணவர்களின் பெயர் முதலில் தமிழிலும், பின் ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவரின் புகைப்படம், சான்றிதழ் வரிசை எண், அசல் சான்றிதழ் ஆய்வுக்கான 'பார்கோடு' குறியீடு, அரசு மதிப்பெண் பட்டியல் எண், தேர்வு பதிவு எண், 10 இலக்க நிரந்தர பதிவு எண், பிறந்த தேதி, கல்வி மாவட்ட குறியீட்டு எண் போன்றவை இடம் பெற்றிருந்தன. மேலும் பள்ளியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் சில பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழில் தமிழில் ஏராளமான பிழைகள் உள்ளன. 'அவற்றை சென்னை அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி திருத்தி தருவதாக கூறி,' சான்றிதழ்களை வழங்க அந்த பள்ளிகள் மறுத்து விட்டன. இதனால் சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
மாணவர்கள் கூறுகையில், 'கல்லுாரியில் தற்காலிக சான்றை காட்டி சேர்ந்துவிட்டோம். தற்போது பள்ளிகளில் அசல் சான்று வழங்கப்பட்டு வருவதால், அவற்றை கல்லுாரி நிர்வாகத்தினர் கேட்கின்றனர். ஆனால் பிழை உள்ளதாக கூறி மதிப்பெண் சான்றுகளை தர பள்ளி நிர்வாகத்தினர் மறுத்துவிட்டனர். விரைவில் கிடைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிழைகளை திருத்தி மதிப்பெண் சான்றிதழ்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.