WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 14, 2017

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு.

''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஏழாவது சம்பளக் கமிஷனை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஜாக்டோ ஜியோ சார்பில் ஜூலை 18 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆக., 5 ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்பர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2003 ல் அமல்படுத்தியது முதல் 4.44 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என தெரியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எனில் மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக வேண்டும். ஆனால் இதுவரை மாநில அரசு அதில் இணையவில்லை. ஏற்கனவே இத்திட்டம் சாத்தியப்
படாது என கைவிடப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஆயிரம் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே புதிய 
ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.