''உயர் நீதிமன்ற தடை நீங்கியதும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ஜக்கையன்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேலசிந்தலைச்சேரி கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: விதிமுறைகள் பூர்த்தியானால், தரம் உயர்த்தப்படும்.
தி.மு.க., - சேகர்பாபு: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்கப்படவில்லை.
அவர்களுக்கு எப்போது வழங்கப்படும்?
அமைச்சர் செங்கோட்டையன்: உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக, 2016 - 17ல், 'லேப் - டாப்' வழங்கப்படவில்லை. உயர் நீதிமன்ற தடை நீங்கியதும், அனைவருக்கும், 'லேப் - டாப்' வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.