'தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, அரசு அமைத்துள்ள குழு, அறிக்கை தந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
தி.மு.க., - பொன்முடி: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, போராட்டத்தை அறிவித்துள்ளது. அவர்கள், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முக்கியம். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், எப்போது அமல்படுத்தப்படும்?
நிதியமைச்சர் ஜெயகுமார்: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய, கூடுதல் தலைமை செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.
குழு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சந்தித்து, கருத்துக்களை கேட்டறிந்து உள்ளது. அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டனர்; அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.