தமிழகத்தில் தான் உயர்கல்வி படிப்பவர்களின் சதவிகிதம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் அரசின் கொத்தடிமையாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் தான். அதிலும் குறிப்பாக பி.எச்டி படிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகம். அதற்கு காரணம் தமிழ்நாட்டில் பிஎச்டி முடித்தவருக்கு TRBயில் வழங்கப் படும் மதிப்பெண்களே . அதாவது M.Sc உடன் PhD முடித்தால் 9 மதிப்பெண் வழங்குகிறார்கள் . M.sc mphil உடன் PhD இருந்தாலும் 9 மதிப்பெண்ணே ,
M.sc, mphil PhD உடன் நெட் செட் இருந்தாலும் 9 மதிப்பெண் தான் , அதை விட கொடியது m.sc m.Phil PhD SET /NET உடன் PDF ( post doctorate of fellow) இருந்தாலும் 9 மதிப்பெண் தான் வழங்குகிறது. இது தான் தமிழகத்தில் கல்வியாளர்களுக்கு கிடைக்கிற சமுக நீதியா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதைவிட கொடுமை தமிழகத்தின் உயர்கல்வி துறையில் நடந்த முறைகேடுகளுக்கு நிறைய உண்டு. உதாரணம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் உள்ள உபரி பேராசிரியர்கள்/ ஆசிரியல்லா பணியாளர்கள் எண்ணிக்கை 5000 க்கும் மேல் உள்ளது. தனியார் பல்கலைகழகமாக இருந்த போது பெரும்பலானவர்கள் முறைகேடாக பணியமர்த்தப் பட்டவர்கள். இதை பற்றி CBI விசாரணை நடத்த தமிழக அரசு தயரா என கேள்வி கேட்க எந்த அரசியல்வாதிக்கும் துணிச்சல் இல்லை. இதைவிட கொடுமை என்னவெனில் ரூ 500 கையூட்டு பெற்றார் VAO / RIA / PDO/SI /sub collecter அதனால் இலஞ்ச ஒழிப்பு துறையில் கைது என பத்திரிக்கையில் அரை பக்கம் போடும் நிறைய பத்திரிக்கையாளர்களும் சரி , இரண்டு நாளைக்கு தொலைகாட்சியில் ஒளிபரப்பும் ஊடக நண்பர்களும் சரி உயர்கல்வி துறையில் நடைப் பெறும் ஊழல்களை வெளியிட 90% தயங்குகிறார்கள். காரணம் அவர்கள் எல்லாம் பெரும்பாலும் அரசியல்வாதிகளாகவும் , தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி நடத்தி கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்களாகவும் ஒரு சில ஊடகங்கள் கல்லூரி வைத்திருக்கும் முதலாளியின் பினாமிகளாகவும் இருப்பதால் நிறைய முறைகேடுகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்து விடுகின்றன. 1 வது பள்ளி மாணவனுக்கு பாடம் கற்று தர வேண்டும் எனில் டெட் தகுதித்தேர்வு தேர்ச்சிப் பெற வேண்டும். ஆனால் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி இருந்தால் போதும். அதுவும் தமிழகத்தில் எல்லா கல்லூரி பேராசிரியர் பணியிடங்களும் போட்டித்தேர்வு வைத்தே நிரப்ப படுகிறது. இருப்பினும் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடம் மட்டும் இன்டர்வியு மட்டும் வைத்து தேர்வு செய்யப் படுகிறது ஏனோ என கல்வியாளர்கள் புலம்புகின்றனர் . இந்த இன்டர்வியு வீடியோரெக்கார்டிங் எதுவும் செய்யப் படுவதில்லை. எனவே உண்மை தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. கௌரவ விரிவுரையாளர்கள் போதுமான கல்வி தகுதியை வைத்துள்ளனர் . அவர்களை பணி நிரந்தரம் செய்ய 15 வருடமாக கோரிக்கை வைத்தும் பலனில்லை . கௌரவ விரிவுரையாளர்களிடம் உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு ரூ 550 பெறுபவர்களோ அல்லது மற்ற கௌரவ விரிவுரையாளர் அமைப்போ கௌரவ விரிவுரையாளர்களின் பணிநிரந்தரம் மற்றும் TRB யில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு என இட ஒதுக்கீடுக்குக்காக தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Friday, December 1, 2017
கல்வித்துறையில் நடைப்பெறும் ஊழல்கள் வெளிவராததற்கு காரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.